தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோரப் பகுதியில் ஆற்றுப்பகுதியும் கடல் நீரும் ஆற்று நீரும் கலக்கும் இடத்தில் உருவாகக்கூடிய ஒருவகை இறால் மோட்டோ இறால் எனப்படுகிறது. இந்நிலையில் மீனவர்கள் வலையில் மோட்டோ இறால் பிடிபட்டது. 4 கிலோவுக்கு மேல் பிடிபட்ட இந்த மோட்டா இறால் கிலோ ரூபாய் 500 என்ற விலையில் விற்பனையானது. இது குறித்து மீனவர்கள் கூறுகையில் தற்போது சீசன் சரியில்லாமல் கடலில் மீன்கள், இறால்கள் வரத்து குறைவாக உள்ளது. இந்த நிலையில் கடலோரத்தில் ஆற்றுப்பகுதியில் வாழக்கூடிய மோட்டோ இறால் மீனவர்கள் வலையில் சிக்கி வருகிறது. இது பார்ப்பதற்கு சிங்கி இறால் போல் தோற்றமளிக்கும். இது ஆற்றுப்பகுதியில் உள்ள கோரைகள் அடர்ந்திருக்கும் பகுதியில் இனப்பெருக்கம் செய்து வாழக்கூடியது. இந்த வகையான மோட்டோ இறால் மீனவர்கள் வலையில் பிடிபடுவது அரிது. இந்த வகை இறால்கள் பிடிப்பட்டால் ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் வாங்கி செல்வது வழக்கம். தற்போது குறைந்த அளவே சிக்கியதால் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என மீனவர்கள் தெரிவித்தனர்.