பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில்
தமிழக அரசு அறிவித்த அக். 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வரை தூய்மை பாரத இயக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தூய்மையை நோக்கி ஒரு பயணம் என்ற தலைப்பில் தூய்மை மாரத்தான் போட்டி நேற்று 29 ஆம் தேதி நடந்தது. ஊராட்சி தலைவர் ஜெயசுந்தரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் 68 பேர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற 5 பேருக்கு முதல் பரிசாக ரூ. 5001, 2வது பரிசு ரூ4001, மூன்றாவது பரிசாக 3001, 'நான்காவது பரிசாக 2001 ஐந்தாவது பரிசாக 1001 ம் வழங்கப்பட்டது. 5 கிமீ தூரத்தை கடந்த அனைவருக்கும் வரும் கிராம சபைக்கூட்டத்தில் சான்றிதழ்களும் கேடயங்களும் வழக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.