கண்ணனாறு தற்காலிக தரை பாலம் உடைப்பு: போக்குவரத்து துண்டிப்பு

80பார்த்தது
கண்ணனாறு தற்காலிக தரை பாலம் உடைப்பு: போக்குவரத்து துண்டிப்பு
தஞ்சை மாவட்டத்தையும், திருவாரூர் மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணனாறு தரைப்பாலம் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் மூழ்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும். இப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது ரூ. 13 கோடி நிதியில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதனால் தற்போது தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு அந்த தரைப்பாலத்தில் கால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. 

தொடர்ந்து 3 நாட்கள் பெய்த கனமழையில் கண்ணனாற்றில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரால் தற்காலிகமாக போடப்பட்ட தரைப்பாலம் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுக்கூர் பெரிய கோட்டையிலிருந்து சொக்கநாவூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு மாற்று வழியில் விடப்பட்டுள்ளது. மதுக்கூர் அருகே கண்ணனாற்றில் தற்காலிக தரைப்பாலம் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த வழியாக யாரும் செல்லாமல் தடுப்பு அமைக்கப்பட்டு காவலுக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி