கடலுக்குள் சென்று, மணல் சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு

2224பார்த்தது
தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்களால் பிரச்சாரம், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடந்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் தேசியக்கொடி பறக்க பாராளுமன்ற மாதிரியை உருவாக்கி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம் வரைந்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில், தாசில்தார் சுகுமார் முன்னிலையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அலுவலர்கள், மீனவர்கள் இணைந்து என் வாக்கு என் உரிமை, காசு பணம் வாங்காமல் தொடர்ந்து விழிப்புணர்வு கண்ணியமாக வாக்களிப்போம் என்பதை முன்னிறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படகுகளில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில், தாசில்தார் சுகுமார் முன்னிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடலுக்குள் சென்று எனது வாக்கு எனது உரிமை என வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி