அதிராம்பட்டினத்தில் படகிலிருந்து கடலில் விழுந்து மீனவர் பலி

83பார்த்தது
அதிராம்பட்டினத்தில் படகிலிருந்து கடலில் விழுந்து மீனவர் பலி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, அதிராம்பட்டினம் ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் பகுருதீன் (43). மீனவரான இவர் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காற்று வீசியதால் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து சக மீனவர்கள் கடலில் குதித்து பகுருதீனை மீட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பகுருதீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் விழுந்து பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :