சபரிமலை செல்ல ரயில் நிறுத்தம் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

78பார்த்தது
சபரிமலை செல்ல ரயில் நிறுத்தம் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்வது வழக்கம். அந்த வகையில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வேன், கார், பேருந்துகள் மூலம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்க முயற்சியில் கேரளா அரசு இந்த வருடம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து சபரிமலை நுழைவாயிலான புனலுார் ரயில் நிலையம் வரை நேரடியாக செல்ல வேளாங்கண்ணி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் மற்றும் புனலூர் நகரம் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு எளிதாக ரயில் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி