உளுந்து பயிரில் மஞ்சள் நோய், விவசாயி வேதனை

83பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கூனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). இவர் சுமார் 30-ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயி ஆவார். இந்த நிலையில் 10-ஏக்கரில் உளுந்து பயிர் செய்வதற்காக பாபநாசம் அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து உளுந்து விதைகளை கொள்முதல் செய்துள்ளார். கொள்முதல் செய்த உளுந்து விதைகளை வயல்களில் தெளித்து 20-நாட்களிலேயே செடிகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டதாகவும், 55-நாட்கள் ஆகியும், உளுந்து காய்கள் வைக்காமல் இருந்து வருவதாகவும், பள்ளிக்கு செல்லும்  பிள்ளைகளுக்கு கட்டணம் கட்டுவதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உளுந்து பயிரை பார்வையிடும் போதெல்லாம் மன அழுத்தம் ஏற்பட்டு கண்ணீர் வருவதாகவும், அரசை நம்பி நல்லது நடக்கும் என பள்ளிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்கிறோம். அது போன்று, விவசாயத்திற்கு தேவையான உளுந்து விதைகளை அரசிடம் பெற்று ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க தனது வேதனையை தெரிவிக்கும் விவசாயி,   தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உளுந்து பயிரை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி