விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் மகளிர் தின விழா

67பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட கவுன்சிலர் சாந்தி தேவராஜன் தலைமையில் நடைபெற்றது,  
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஜெயப்ரிதா ஆகியோர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பெண்கள் மத்தியில் சிறப்புரையாற்றினர்.  
சங்கத் தலைவர் தேவராஜன், நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், வங்காரம் பேட்டை வண்ணமயில் மகளிர் குழு தலைவி புஷ்பா தேசிங்கு, சூலமங்கலம் ஶ்ரீ ஆண்டாள் மகளிர் குழு தலைவி மகாலட்சுமி  விவேகானந்தா ஐஏஎஸ் அகாடமி பயிற்சி பள்ளி பயிற்சிநர் 
லட்சுமிபிரியா  ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடர்ந்து விவேகானந்தா சமூக கல்வி சங்கங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய 
களப்பணியாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக விவேகானந்தா சமூக கல்வி சங்க செயளாளர் தங்க. கண்ணதாசன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you