கால்நடை மருத்துவமனை கட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்

567பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ரூபாய் 77. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், கும்பகோணம் மாநகர துணை மேயர்  தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வம், மாவட்டத் துணைச் செயலாளர் அய்யாராசு,  
பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாசர்,
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், மண்டல இணை இயக்குனர் சுப்பையன், உதவி இயக்குனர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பாலகணேஷ், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன்,   வார்டு உறுப்பினர்கள் கஜலட்சுமி குமார், பிரேம்நாத் பைரன், கால்நடை மருத்துவர்கள், ஒப்பந்தக்காரர் சந்தோஷ் சரண், உட்பட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி