கட்டுப்பாட்டை இழந்து பள்ளியின் தடுப்பு சுவரில் மோதிய கார்

3270பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமி மலையில் உறவினரின் திருமணத்திற்க்கு சென்று விட்டு தஞ்சாவூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரை தஞ்சாவூரை சேர்ந்த ராமமூர்த்தி (57) என்பவர் ஓட்டி வந்தார். உடன் தஞ்சாவூரை சேர்ந்த காரின் உரிமையாளர் அசோகன் (62) அந்தக் காரில் பயணம் செய்திருந்தார். பாபநாசம் அருகே ரெகுநாதபுரம்  பகுதியை கார் வந்தடைந்ததும் எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே வந்தவரின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் காரை திருப்பினார்.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையான ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியின் தடுப்புச் சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினர். மேலும் பள்ளி விடுமுறை தினம் என்பதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி