சர்க்கரை ஆலை- கரும்பு விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு

565பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் அமைந்துள்ள திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டத்தினை அறிவித்துள்ளது. விதைக்கான மானியம் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 7000,   விதை நாற்றங்களுக்கு மானியமாக ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாயும், மேலும் கரும்பு நடவை ஊக்குவிக்கும் பொருட்டு பயிர் பூச்சிக்கொல்லி மருந்துக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும், பயோ உரம் அல்லது நுண்ணூட்டச் சத்து இடுவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 500 முதல் மற்றும் இரண்டாம் கட்டை கரும்பில் மகசூலை ஊக்குவிக்கும் பொருட்டு இடைவெளி பழுது கரும்பு நிரப்புவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 2000 ரூபாயும், முதல் நிலை நாற்றாங்கள் அமைப்பதற்கு விதைக்கான மானியம் ஏக்கர் ஒன்றுக்கு 7500, வண்டி வாடகை மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது 5000 ரூபாயும் அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு பயிர் பூச்சிக்கொல்லி மருந்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனை பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு அதிக லாபம் பெறலாம் என விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி