பாபநாசம் அருகே சைதான் பீவீ அம்மா அவுலியா சந்தனக்கூடு உரூஸ்

54பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே  அம்மாபள்ளி தைக்காலில் அமைந்துள்ள சைதான் பீவீ அம்மா அவுலியா சந்தனக்கூடு உரூஸ் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   
நிகழ்ச்சியில் மக்கான்தர் இல்லத்திலிருந்து  சந்தனக்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக  தர்காவை வந்தடைந்தது,  பின்னர்
சைதான் பீவீ அம்மாவிற்கு,
மௌலூது சரிப் பாத்திஹா
ஓதி, பக்கீர்மார்களின் தப்ஸ்கள் இசை முழங்க கொடியேற்றத்துடன் ரவ்லா ஷரீபீல் சந்தனம் பூசி,   பொதுமக்களுக்கு தப்ரூக் பிரசாதம் வழங்கப்பட்டது.  
நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு  பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மாப்பள்ளி தைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி