திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென் தமிழகம், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை 21ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.