கும்பகோணத்தை அடுத்த அசூர் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளைதீயிட்டு கொளுத்தியதால் வாகனஓட்டிகள்அவதியடைந்துள்ளனர். அசூர் புறவழிச்சாலை
கும்பகோணத்தை அடுத்த அசூர் அருகே புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறவழிச்
சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படும் வழக்
கம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதிகுப்பை மேடு போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள்,
வாகனஒட்டிகள்அவதிக்குள்ளாகின்றனர். மேலும்சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு குவிந்து காணப்படும் குப்பைகள்
காற்று வீசும் நேரத்தில் பறந்து செல்கிறது. சாலையில் புகை மூட்டம்
இதனால் சாலைகளிலும் வாகனங்களில்செல்வோர் மீதும் குப்பைகள் வந்து விழுகிறது.
இதனால் ஒரு சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளைஅவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர். இதன்
காரணமாக அந்த சாலையில் புகைமூட்டமாககாட்சி அளிக்கிறது. அதேபோல் அருகருகேகுவிந்து கிடக்கும் குப்பைகளும் தீயில் எரிவதால்சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத
அளவிற்கு புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் மெதுவாக செல்கின்றனர்.
சிலர் கண் எரிச்சல் மூச்சு திணறல் காரணமாகஅவதிப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி
கள் புறவழிச்சாலையோரம் உள்ள குப்பைகள். இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும்.