தொடர் மழை கொத்தங்குடிமக்கள் 140 பேர் இடம் மாற்றம்

60பார்த்தது
கும்பகோணம் தொகுதி, கொத்தங்குடி ஊராட்சி, பெய்து வரும் கனமழையினால் தாழ்வான பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்படும் என அச்சம் ஏற்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் வட்டார வளர்ச்சி துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டு தொகுப்பு வீடுகளில் தங்கி உள்ளவர்களை கொத்தங்குடி சமுதாய கூட்டத்தில் தங்க வைக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுவாமிநாதன் ஆகியோர் அந்த தொகுப்புகளில் உள்ள சுமார் 140-க்கு மேற்பட்டோரை அங்கிருந்து அழைத்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் நேரில் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அனைத்து வசதியும் செய்து தரப்படும் என உறுதி அளித்து அவர்களுக்கு மதிய உணவு மற்றும் பிஸ்கட் வழங்கினார். இந்த நிகழ்வில் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி. கணேசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜே. சுதாகர் , நாகராஜ் CPI , ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி மற்றும் பல உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி