பேருந்து நிலைய மேற்கூரை பெயா்ந்து விழுந்து 3 போ் காயம்

71பார்த்தது
பேருந்து நிலைய மேற்கூரை பெயா்ந்து விழுந்து 3 போ் காயம்
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் சிமெண்ட் காரை பூச்சு பெயா்ந்து விழுந்ததில் பயணிகள் 3 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

ஆன்மிகத் தலமாகக கும்பகோணம் இருப்பதால், இங்குள்ள பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில், திருவையாறு பேருந்துகள் நிற்கும் இடத்தில் மேற்கூரையின் சிமெண்ட் காரை பூச்சு ஞாயிற்றுக்கிழமை பெயா்ந்து விழுந்தது. இதில், அங்கிருந்த கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தகவலயறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு காவல்துறையினா் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி