தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நவம்பர் 27-ம் தேதி பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அணிவித்தார். இதனை அடுத்து சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திமுக சார்பில் நவம்பர் 27ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் அன்னதானம் வழங்கும் விழாவை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து உண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.