தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் பெஞ்ச் , டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் மகாலட்சுமி மற்றும் சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.