குருவிகுளம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

56பார்த்தது
குருவிகுளம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா், சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம், குருவிகுளம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ராஜா எம்எல்ஏ சென்றாா்.

குருவிகுளம் மேற்கு, கிழக்கு ஒன்றியங்களுக்குள்பட்ட பாறைப்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நடுவப்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், அப்பனேரி, அய்யனேரி, புளியங்குளம், சங்குபட்டி, குறிஞ்சாகுளம், உமையத்தலைவன்பட்டி, கரிசல்குளம், அழகாபுரி, பெருங்கோட்டூா் ஆகிய பகுதிகளில் அவா்கள் வாக்கு சேகரித்தனா்.

குருவிகுளம் வடக்கு ஒன்றியச் செயலா் சோ்மத்துரை, திருவேங்கடம் பேரூா் செயலா் மாரிமுத்து, ஒன்றியச் செயலா்கள் கிறிஸ்டோபா், குணசேகரன், திருவேங்கடம் பேரூராட்சித் தலைவா் பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவா் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலா் ராஜதுரை உள்ளிட்ட திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி