ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்

65பார்த்தது
ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.  

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசியதுடன் , மாநில செயற்குழு முடிவுகள் குறித்து விளக்கிக் கூறினார்.

 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: - 

நோய்வாய்ப்பட்ட , ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கட்டணமில்லா சிகிச்சை பெற வேண்டி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும்போது உரிய காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை.

பல்வேறு மருத்துவமனைகள் முறையாக காப்பீட்டுத் தொகையை பெற்று தருவதில்லை.

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்குஊதியம் பெற்று வழங்கும் இணைய தள முறையில் மாதந்தோறும் வருமான வரிபிடித்தம் செய்யும் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்யாத கருவூல நிர்வாகத்தை கண்டித்தும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய முடிவின்படி வருகின்ற 13. 6. 2024 அன்று பிற்பகல் 5 மணிக்கு மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி