சங்கரன்கோவிலில் மக்களோடு முதல்வர் திட்ட முகாம்

72பார்த்தது
சங்கரன்கோவிலில் மக்களோடு முதல்வர் திட்ட முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் அமைந்துள்ள நகராட்சி சமுதாய நலக்கூடத்தில்
மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் சேரும் வகையில் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளைப் பெற்று உரிய அதிகாரிகளிடம் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார்.

நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், மேலாளர் செந்தில், நகர் மன்ற உறுப்பினர்கள் வேல்ராஜ், அலமேலு, தென்காசி வடக்கு மாவட்ட தி. மு. க. இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி