பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து

68பார்த்தது
பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து
விருதுநகர் சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பட்டாசு ஆலையின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை தற்காலிகமாக ரத்து செய்தது. 10 பேர் உயிரிழந்த விபத்தின் எதிரொலியாக வெடிபொருள் சட்டத்தின் கீழ் பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஆலை உரிமையாளர் சரவணன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த திருத்தங்கல் முருகன் காலனியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன்(39), சிவகாசி நேஷனல் காலனியைச் சேர்ந்த போர்மேன் சுரேஷ் பாண்டியன் (41)ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முத்துகிருஷ்ணன், சுரேஷ் பாண்டியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி