பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. படேல் நகரில் உள்ள ஒரு பள்ளியில் லால் பாபு மஹதோ என்ற ஆசிரியர் பணிபுரிகிறார். இவர் சோன்பர்சா சவுக்கில் உள்ள தனது வீட்டின் முன் சாலையோரம் குப்பைகளை எரித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி ரிவர்ஸ் கியரில் வேகமாக வந்தது. அப்போது லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய ஆசிரியர் உடல் நசுங்கி பலியானார். அதன்பின், லாரி ஓட்டிவந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.