இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது. ஆண்களுக்கு இணையாக அவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, கடலூர் அஞ்சலையம்மாள், லீலாவதி அம்மையார் போன்ற பல பெண் போராட்ட வீரர்கள் அறியப்படாமல் உள்ளனர். லீலாவதி அம்மையார் சுதேசி இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததற்காக 3 முறை சிறை சென்றுள்ளார்.