சூர்யாவின் 'கங்குவா' மாஸ் அப்டேட்

53பார்த்தது
சூர்யாவின் 'கங்குவா' மாஸ் அப்டேட்
சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா பத்து விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் முழு அவுட்டையும் பார்த்துள்ள நடிகர் சூர்யா மிகுந்த திருப்தி அடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி