கடந்த ஆண்டு தீபாவளி முதல் நடப்பு ஆண்டு தீபவாளி வரையிலான ஓராண்டில், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ.128 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை, வலுவான பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த ஓராண்டில் பங்குச் சந்தை சரியான ஏற்றம் கண்டது. குறிப்பாக, மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பங்குச் சந்தை புதிய உச்சம் தொட ஆரம்பித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.