இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று (நவம்பர் 21) காலை சரிவுடன் தொடங்கியது. அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா வைத்திருக்கும் குற்றச்சாட்டே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் தற்போது ரூ.2 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூலதன சந்தை தரவுகளின்படி தற்போது அதானி குழுமத்தின் 11 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாக உள்ளது.