ஸ்டாலின் - மோடி.. விண்ணை பிளந்த கோஷம் (வீடியோ)

60959பார்த்தது
திருச்சியில் ரூ. 20,140 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இதற்கான நிகழ்ச்சி இன்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியபோது பாஜகவினர் 'மோடி மோடி' என கோஷமிட்டனர். பின்னர் முதல்வர் தமிழகத்தின் வளர்ச்சியை எடுத்துரைக்கும்போது திமுகவினர் 'ஸ்டாலின் ஸ்டாலின்' என கோஷமிட்டனர். திமுகவினரும், பாஜகவினரும் மாறி மாறி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.