நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா என்பவருக்கும், நடிகர் முனீஸ்ராஜாவுக்கும் 2022-ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு ராஜ்கிரண் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஜீனத் அவரை பிரிந்தார். இந்நிலையில் முனீஸ்ராஜா பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களிடன் கடன் பெற்று மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களிடம் அவர் பேசும் ஆடியோ லீக்காகியுள்ளது.