முடி கொட்டுதலை சரி செய்யும் சில கை மருத்துவங்கள்

62பார்த்தது
முடி கொட்டுதலை சரி செய்யும் சில கை மருத்துவங்கள்
கரிசாலை இலை, காய்ந்த நெல்லிக்காய் (நெல்லி முள்ளி), அதிமதுரம் ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்தல் நிற்கும்.

*நில அவரை இலையை அரைத்து முடி உதிரும் இடங்களில் தேய்க்கலாம்.

*சின்ன வெங்காயத்தை இடித்து, சாறு பிழிந்து முடி கொட்டிய இடத்தில் தடவி அரை மணி நேரத்தில் குளிக்க வேண்டும்.

*செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவேண்டும்.

*பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, தேங்காய் எண்ணெயை சமமாக எடுத்து நீர் வற்ற காய்ச்சி தலைக்கு தேய்த்து வரலாம்.

தொடர்புடைய செய்தி