இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு

76பார்த்தது
இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. போட்டி முடிவடைந்ததையடுத்து முதல் ஆளாக விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது டி20 போட்டி ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளியே வருவதற்குள், இன்று இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி