பேருந்துக்குள் மழை.. பயணிகள் அவதி.. வைரல் வீடியோ

63பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கடும் வெள்ளத்தால் சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், மக்கள் பயணிக்கும் பேருந்து உள்ளே மழை பெய்துள்ளது. மழையால் பேருந்தின் மேற்பகுதி சேதமடைந்து ஓட்டைகள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி