ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் தனிமையான உணர்வு போன்றவற்றை கொடுக்கும். இப்படி பதட்டமாக, மன அழுத்தத்தோடு தொடர்ந்து இருந்தால் உடல் ரீதியான பல பாதிப்புகள் பல ஏற்படலாம். அதில் முக்கியமானது இதய நோய். இளம் வயதினர் தற்போது அதிகளவில் மாரடைப்பால் மரணிக்க இது போன்ற விஷயங்கள் முக்கிய காரணமாக உள்ளது.