தலைமுறை தலைக்க மாட்டு வண்டியில் பயணம் செய்த கிராம மக்கள்

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி, மணப்பட்டி, சிவபுரிபட்டிகிராமங்களில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை வசித்து வருகின்றனர். இவர்களில் இரண்டு சமுதாய கிராம மக்கள் தொன்றுதொட்டு ஒன்றிணைந்து குலதெய்வகோவிலான திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோலநாதர் கருப்பர் கோவிலில் ஆடி படையல் திருவிழாவை ஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர், அதேபோல் இந்த ஆண்டும் ஆடிப்படையில் முன்னிட்டு இன்று பாரம்பரிய முறைபடி சுமார் 30க்கும் மேற்பட்ட காளைகள் பூட்டிய மாட்டு வண்டிகளில் சிங்கம்புணரியில் இருந்து தெக்கூர், நெற்குப்பை, பூலாங்குறிச்சி , வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் ஆண்டாண்டு காலமாக தங்களது முன்னோர்கள் எவ்வாறு மாட்டு வண்டிகளில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபாடு நடத்தினார்களோ அதேபோல் இந்த தலைமுறையில் , உள்ளவர்களும், எவ்வளவு வசதிகள் இருந்தாலும் பாரம்பரிய முறையில் குலதெய்வ வழிபாட்டிற்கு மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு நல்ல விவசாயம் செழிக்கவும் தலைமுறை தலைக்கவும், குழந்தைகள் நோய் நொடியின்றி வாழவும் வேண்டுதல் வைத்து கிடா வெட்டி சிறப்பு வழிபாடு செய்து சமைத்த உணவுகளைசுமார் 5000 பேருக்கு மேல் பரிமாறி மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விழாவாக இவ்விழாவை பாரம்பரிய முறையில் கொண்டாடி வருகின்றனர், ,
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி