சமரச வார விழாவை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி

82பார்த்தது
சமரச வார விழாவை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை ஆட்சியரக பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தனி நபர் வழக்கு, பண வசூல், குடும்ப, சொத்து வழக்குகள், காசோலை, மின்வாரியம், தொழிலாளர் நலம், உரிமையியல் உள்ளிட்ட வழக்குகளுக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த, சமரச வார விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில்
ஆட்சியரகப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச வார விழாவை முன்னிட்டு வாகன விழிப்புணர் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். சமரச மையம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் நீதிபதி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி