பாஜக அரசை கண்டித்து தி. மு. க. சார்பில் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து சிவகங்கை மாவட்ட தி. மு. க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். திமுக ராஜ்யசபா உறுப்பினரும் அயலக அணி மாநில செயலாளருமான அப்துல்லா தலைமையில் முன்னாள் அமைச்சர் தென்னவன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டியதை கண்டித்தும்
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த, 2 தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி என, தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை முற்றிலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தி. மு. க. , வினர் குற்றம் சாட்டி ஏமாற்றாதே ஏமாற்றாதே மோடி அரசை ஏமாற்றாதே என்ற கண்டனம் முழக்கமிட்டனர்.
இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டனர் நகரச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி