கார்த்திக் சிதம்பரத்திற்காக ஆதரவாக ப. சிதம்பரம் பிரச்சாரம்

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ. காளாப்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் செய்தார் , மக்களிடம் பேசும்போது மோடி அரசால் மருந்துகளின் விலை 20% சதவீதம் உயர்ந்துள்ளது. ஏனென்றால் கார்ப்பரேட் முதலாளிகள் கொழுத்த பணக்காரர்கள் மருந்து கம்பெனிக்காரர்கள், என அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பல நூறு கோடி ரூபாய்களை அள்ளித் தந்திருக்கின்றார்கள், அவர்கள் பல நூறு கோடி ரூபாயை அள்ளித் தந்ததால் விலை கட்டுப்பாட்டை மோடி அரசு செய்தது கிடையாது. விலைகள் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டத்தில் இருக்கு ஆனால் மோடி அரசு அந்த அதிகாரத்தை பயன்படுத்துவது கிடையாது, அதனால்தான் தாறுமாறா மருந்து விலைகள் கூடி விட்டன. அதனால் மோடி அரசை அனுப்பி விட்டு. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய கல்வி கடன் ரத்து, 30 லட்சம் காலி பணியிடங்களை 12 மாதங்களில் பூர்த்தி செய்து, 30 லட்சம் குடும்பங்களில் விளக்கேற்றி வைப்போம் என்று கூறினார்என்று கூறினார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி