தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர், மற்றும் துணை தலைமையாசிரியர்களை பயிற்சி ஆசிரியர்களின் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தாக்க முயன்ற சம்பவம் நேற்று நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று இந்த இரண்டு சம்பவங்களை கண்டித்து டிட்டோஜாக் அமைப்பினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ஆசிரியைகளை தாக்க முயன்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட டிட்டோஜாக் அமைப்பினர் இன்று கலந்து கொண்டனர்.