காவிரி குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையாமல் மக்கள் அவதி

67பார்த்தது
காவிரி குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையாமல் மக்கள் அவதி
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிங்கம்புணரி பகுதியில பணி துவக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
இதனால் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆபத்தான நிலையில் சரி செய்யப்படாமலும் உள்ளது. இய்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் ஒரு சில ஊராட்சிகளில் ஏற்கனவே வந்த குடிநீரே விநியோகிக்கப்படுகிறது. பல ஊராட்சிகளில் இன்னும் நீரேற்றம் செய்யப்படாமல் குழாய்கள் காற்று வாங்குகிறது. இத்திட்டத்தை நம்பி எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி