தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றுகளைவழங்கிய ஆட்சியர்

2208பார்த்தது
இந்திய முழுவதும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வக முடிவுகளின் தரத்தை தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் கண்காணித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்குள்ள ஆய்வகங்கள் மூலம் நோயாளிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் 52 சுகாதார நிலையங்களும் இணையவழியாக தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்துக்கு விண்ணப்பித்தன.

இதையடுத்து தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் முகமையாக நியமித்த வேலூர் சிஎம்சி மருத்துவமனை 52 சுகாதார நிலையங்களின் ஆய்வக முடிவுகளை கண்காணித்து வந்ததுள்ளநிலையில் ஆய்வக முடிவுகள் தரமாக இருந்ததால் 34 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய ஆய்வக அங்கீகார சான்று கிடைத்துள்ள நிலையில்
இ ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தேசிய ஆய்வக அங்கீகார சான்றுகளைவழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி