சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் எம்ஜிஆர் நகர் இங்கு 10ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தெரு விளக்குகள் சாலை அமைத்து தரக் கூறி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்ததார்கள். தற்போது கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக சுமார் பதினைந்து வீதிகளில் செல்லும் வழிகள் அனைத்தும் சேரும் சகதியமாக இருக்கிறது இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல இப்போது மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அவசர உதவிக்கு பிரசவத்துக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ க்கள் பகுதிக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் திருப்புவனம் டு பூவந்தி செல்லும் நெடுஞ்சாலையில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் நுழைவாயில் எதிரே சாலையின் நடுவே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவே அப்போது மக்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.