5-வது சுற்று தடுப்பூசி பணியினை துவக்கிவைத்த ஆட்சியர்

51பார்த்தது
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரவலூர் கிராமத்தில் 300 மாட்டினங்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிவகங்கை மாவட்டத்திலுள்ள மொத்தம் 2, 11, 300 மாட்டினங்கள் பயன்பெறவுள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களிலுள்ள பாதுகாப்பான முறையில் அதற்கான தகுந்த உபகரணங்களில் குளிரூட்டப்பட்ட நிலையில் (ICE LINED REFRIGIRATOR) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள 70 குழுவினர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசியினை கால்நடைகளுக்கு செலுத்துவதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கலிருந்து பாதுகாத்திட முடியும். இதனால் கறவைமாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவைமாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும்.
இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடை செல்வங்களை கோமாரி நோயிலிருந்து பேணி பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி