சிவகங்கை: குப்பைகளில் தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை மின்வாரிய அலுவலகம் அருகே குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. கிடங்கு நிரம்பியதால் அருகேயுள்ள சாலையில் குப்பையை கொட்டி வருவதோடு, அதில் தீவைக்கும் செயலில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 

இதனால் ஏற்படும் புகையால் ஹவுத் அம்பலம் தெரு, காதர்பிச்சை தெரு, சூறாவளி தெரு, கலிபா தெரு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். 

குப்பை கொட்டப்படும் சாலை வழியாகத்தான் புதூர், சாலையூர் மல்லிபட்டினம், பூச்சியனேந்தல், பகைவரைவென்றான், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மின்வாரிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சந்தைப்பேட்டைக்கு சென்று வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதாலும், சாலையில் குப்பை பரவி கிடப்பதாலும் அவர்கள் சிரமப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி