சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே தட்டான்குளம் பகுதி யில் நான்குவழிச் சாலையில் உள்ள பாலத்துக்கு அடியில் குப்பை கொட்டப்பட்டு வருகின் றன. அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பையை அடிக்கடி தீவைத்துஎரிக்கின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் கிரமப்படுகின்றனர் இரு சக்கர வாகனங்களில் செல் வோருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. சாலை தெரியாத அளவுக்கு புகை பரவுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.