மானாமதுரை: பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம்மீட்பு

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள செய்களத்தூர் கிராமத்தில் கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் பாழடைந்த ஒரு கிணற்றில், சுமார் 35 வயதுடைய ஆண் சடலம் மிதந்து கிடந்தது. 

ஆடுகளை மேய்க்க சென்ற ஒரு விவசாயி இந்த சடலத்தை கண்டு மானாமதுரை சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார். தகவலைப் பெற்ற காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த மர்ம மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி