கீழடி அகழாய்வில் 2 தானியக் கொள்கலன்கள் கண்டுபிடிப்பு

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழடியில் தொல்லியல் துறையினர் ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்ட பொழுது 3 இரண்டு அடி ஆழத்தில் நாம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் மண்பாண்டத்தால் இரண்டு தானிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தானியக் கொள்கலனில் நம் முன்னோர்கள் வீட்டில் தங்களது தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தி உள்ளனர், அதன் அருகையே மற்றொரு குழியில் அதன் தொடர்ச்சியாக இரண்டடி ஆழத்தில் நம் முன்னோர்கள் வீடு கட்டி வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் ஓடுகளால் ஆன வீட்டின் மேற்கூறையும் கிடைத்துள்ளது.

இதன் மூலம் நாம் முன்னோர்கள் நகர நாகரீகத்தோடு மிகச் செழிப்பாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டும் விதமாக இன்னொரு ஆதாரமும் கிடைத்துள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you