மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்

74பார்த்தது
தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 71வது வயதில் கடந்த 28ம் தேதி உயிரிழந்தார். விஜயகாந்த் அவர்களின் பொதுத் தொண்டு மற்றும் அரசியல் வாழ்வை போற்றும் விதமாக சிவகங்கை மாவட்ட திருப்புவனம் பேருந்து நிலைய பகுதியில் நேற்று மானாமதுரை இளையான்குடி திருப்புவனம் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து கட்சிகளின் சார்பில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், த, மா, கா, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி