அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

67பார்த்தது
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விமான மூலம் மதுரை வருகிறார் அதனை தொடர்ந்து நாளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பள்ளியில் உள்ள மைதானத்தில் விமானம் இறங்குவதற்கான ஏற்பாடுகள் திவிரமாக நடைப்பெற்று வருகிறது மற்றும் காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து வாகனத்தில் இரண்டாவது பீட் வரை உள்ள சாலையில் ரோடு சோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ்க்கு
ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்காக சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் 25 உதவி காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 1300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் நாளை சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் அமித்ஷாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் நகர் முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகளை ஊண்டி வருகின்றனர் மற்றும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர் ஆங்காங்கே சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி