மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா

61பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடை மகா காரணம் விளங்கும் மகான் நாகூர் ஹஜ்ரத் சாகுல்ஹமீது ஒலியுல்லா தர்காவில் மீன் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 92 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடத்தப்பட்டது கடந்த டிசம்பர் 14ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்ட டு விழாவின் முக்கிய நிகழ்வான ஜனவரி 2ம் தேதி அதிகாலையில் சந்தனம் பூசும் நிகழ்வும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவிலிருந்து ஒத்தக்கடை, சிவன் கோவில் சந்திப்பு வழியாக பஸ் ஸ்டாண்டு வரை சென்று மீண்டும் அதே வழியாக ஊர்வலமாக தர்கா வந்தடைந்தது. மீண்டும் நேற்று மாலை 6 மணிக்கு தர்காவிலிருந்து சந்தனக்கூடு ஆற்றுப் பாலம் வரை சென்று ஊர்வலமாக தர்கா வந்தடைந்தது ஊர்வலத்தின் போது பேண்ட் வாத்தியம், குதிரை நாட்டிய நடனம், வான வேடிக்கை நடைபெற்றது இன்னிசை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன இதில் இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு தர்காவில் வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி