கதவை உடைத்து நகை திருட்டு போலீசார் விசாரணை

53பார்த்தது
கதவை உடைத்து நகை திருட்டு போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்த அனுபவராஜ் மனைவி தேவி 30. இவர் தற்போது கல்லலில் வசித்து வருகிறார். இவருக்கு ஆ. கருங்குளம் அருகே உசிலங்குளத்தில் வீடு உள்ளது. இந்த வீட்டில் மாமியார் வசித்து வருகிறார். மாமியார் ஆக. 28 சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். செப். 2ஆம் தேதி உசிலங்குளத்தில் உள்ள வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைந்து கதவு திறந்து கிடப்பதாக அருகில் உள்ளவர்கள் தேவிக்கு தெரிவித்துள்ளனர். தேவி தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. தேவி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். ஆக. 30ஆம் தேதி இரவு இதே ஊரில் கோயிலில் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் திருடுபோய் உள்ளது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி